புவனகிரி அருகே டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை - ஒருவர் சரண்

புவனகிரி அருகே டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை - ஒருவர் சரண்
X

இறந்த விவசாயி ராமதாஸ்.

புவனகிரியில், டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை செய்த விவகாரத்தில், ஒருவர் கைதான நிலையில், ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சக்திவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் முன்விரோதம் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம், ராமதாஸ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பிய ஸ்ரீதர் தலைமறைவாகியதை தொடர்ந்து, ஒரத்தூர் போலீசார் விவசாயி மீது, டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரின் மேல் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

இதனிடையே டிராக்டர் ஏற்றி ராமதாசை கொலை செய்த முதல் குற்றவாளி ஸ்ரீதர், விருத்தாசலம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மேலும் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த மூன்றாவது குற்றவாளியான மகாராஜனை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள இரண்டாவது குற்றவாளியான ஸ்ரீதரின் தந்தை பரமசிவத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மிகக் கொடூரமான முறையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
why is ai important to the future