புவனகிரி அருகே சாத்தப்பாடி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புவனகிரி அருகே சாத்தபாடி ஏரி 240 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியில் பல்வேறு விவசாயிகள் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து நெல் மற்றும் பல்வேறு வேளாண் பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை தகவல் கூறியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி சாத்தபாடி ஏரியில் சாகுபடி செய்திருந்ததை பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஏரிக்கு கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu