கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் பொன்னன் கோயில் கிராமத்தில் ஆற்றின் நடுவில் சடலத்தை எரிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் பரதூர் சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னன் கோயில் கிராமத்தில் பல ஆண்டு காலமாக மயான வசதி இல்லாததால் இறந்த சடலங்களை புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
பல ஆண்டுகாலமாக ஆற்றின் படுகையிலே சடலங்களை புதைத்தும் எரித்தும் வந்தநிலையில் இறந்த சடலங்களை ஆற்றங்கரையில் எரித்து கொண்டிருந்தபோது திடீரென்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பிரேதம் நீரில் அடித்து செல்லும் நிலை ஏற்பட்டு பிறகு அனைவரும் அவற்றை எடுத்து வந்து மீண்டும் எரிக்கும் நிலை உள்ளது.
ஆகவே பல ஆண்டு காலமாக தனிப்பட்ட மயான இடமோ அல்லது மயான கொட்டகையோ இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் எனவே ஊருக்கு பொதுவான மயான கொட்டகை அமைத்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu