புவனகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவனுக்கு கொரோனா

புவனகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவனுக்கு  கொரோனா
X

சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன்.

புவனகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழிதேவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆ.அருண்மொழித்தேவனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி ஆகியுள்ளது.

ஏற்கனவே பொங்கலுக்கு முன்பாகவே அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூத்த மகன் என இரண்டு பேருக்கும் பாசிட்டிவ் உறுதியான போது அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.வுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. அன்றிலிருந்தே அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!