கடலூரில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் எம்.சி. சம்பத் திறந்து வைத்தார்

கடலூரில் அம்மா மினி கிளினிக்   அமைச்சர் எம்.சி. சம்பத் திறந்து வைத்தார்
X

கடலூரில் சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை, சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தொழில்துறை அமைச்சர் சம்பத் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கடலூர் திருபணம்பக்கம் ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் மேலும் மாவட்டத்தில் இன்னும் 20 மினி கிளினிக்கை திறக்க உள்ள நிலையில் இன்று முதற்கட்டமாக திருப்பணாம்பாக்கத்தில் மக்களை நாடி மருத்துவம் என்ற அடிப் படையில் மினி கிளினிக்கை தொழில்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

முதியவர்கள் வெகுதூரம் சென்று மருத்துவம் பார்க்க இயலாத நிலையில் அவர்கள் பகுதிகளிலேயே மினி கிளினிக் செயல்படும். மேலும் மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் பணியாற்றுவர். காலை 8 மணியில் இருந்து 12 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரை மினி கிளினிக் செயல்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!