வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்
X
"அருட்பெருஞ்ஜோதி- அருட்பெருஞ்சோதி- தனிப் பெருங்கருணை- அருட்பெருஞ்ஜோதி" என்று பக்தியோடு முழங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை தரிசனம் செய்தனர்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 10:00, மதியம் 1:00, இரவு 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் செய்யப்படுகிறது.

காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டனர். பின்னர் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது. கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக அன்னாதானம் வழங்கவும், கடைகள் வைக்கவும் அனுமதி இல்லை என்பதால் பக்தர்களின் வருகை என்பது குறைவாகவே காணப்பட்டது.

Next Story