சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
X

கடலூரில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமையில் மகளிரணியினர் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழுதனர். ஒரு மாதத்தில் திடீரென்று 100 ரூபாய் சிலிண்டருக்கு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும் மத்திய அரசாங்கம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மகளிரணியினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!