ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : வாலிபருக்கு ஆயுள் தண்டணை

ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : வாலிபருக்கு ஆயுள் தண்டணை
X

கடலூரை அடுத்த திட்டக்குடியில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டக்குடி வடகரை சமுதாயக் கூடத்தில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபரான மணிகண்டன் (26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி , ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கலைச்செல்வி ஆஜரானார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!