மக்களே உஷார்- ஜூலை முதல் இதெல்லாம் மாறப்போகுது

மக்களே உஷார்- ஜூலை முதல் இதெல்லாம் மாறப்போகுது
X
நாளை முதல் வங்கி சேவை முதல் சிலிண்டர் வரையில் அப்படி என்னென்ன மாற்றங்கள். இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

மக்களே உஷார்… ஜூலை முதல் இதெல்லாம் மாறப்போகுது- ஜூலை 1 முதல் பர்ஸை பதம் பார்க்க போகும் முக்கிய மாற்றங்கள்.

இந்த மாற்றங்கள் சாமனியர்களுக்கு எந்த வகையில் உதவும்? அல்லது பாதிப்பா? வங்கி சேவை முதல் கொண்டு, சிலிண்டர் வரையில் அப்படி என்னென்ன மாற்றங்கள். இதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் வாருங்கள் பார்க்கலாம்.

இனி ஆர்டிஓ ஆபீஸ் போக வேண்டிய அவசியமே இல்லையாம். ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாமாம்.( அங்க போனாலே அந்த பாடுபடணும் இப்ப இவிங்க என்ன பண்ண போறாங்களோ)

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), அதன் முக்கிய சேவையான பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டில் (BSBD) தான் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அந்த மாற்றங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாம். இதில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, செக் புக் சேவைகள், பணம் அனுப்புவது போன்ற சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளதாம்.

அதாவது எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்பு கணக்கில் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாமாம், ஜூலை 1 முதல் 4 முறைக்கு மேல் அப்பால ATM அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக எடுப்பாங்களாம்.

அதுமட்டுமில்லையாம் எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர், ஒரு ஆண்டில் 10 காசோலை தாள்களை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட காசோலைகளை பயன்படுத்த வேணும் அப்படின்னா கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமாம். இது 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணம் மற்றும் + GST வசூலிக்கப்படுமாம். ஆனா 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்தின் பரிவர்த்தனைக்கு, 75 ரூபாய் + ஜிஎஸ்டி மட்டும் தான் வசூலிக்கப்படுமாம்.(என்ன கொடுமை சரவணாஇது).

அதே சமயத்துல அவசர காசோலை தேவைப்படும் பட்சத்தில் 10 காசோலை புத்தகத்திற்கு 50 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாக மட்டும் தான் வசூலிக்கப்படுமாம். சாமனிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில், தற்போது கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட தொடங்கியுள்ளது, வாடிக்கையாளர்களே நீங்கள் உஷாராக வேண்டிய விஷயங்களில் ஒன்று அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்.

சரி அதை விடுவோம் இதுக்கு வருவோம்...சமையலுக்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை ஜூலை 1 முதல் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. LPG சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களால் ஏற்கனேவே மாற்றப்பட்டு வருது. இந்த சூழ்நிலையில், சிலிண்டர்களின் விலை ஜூலை 1 முதல் மாறக்கூடும் என வேற எதிர்பார்க்கப்படுதாம். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கேஸ் விலையும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் சோடி சேர்ந்த நிலையில், சிண்டிகேட் வங்கியின் ஐ எஃப் எஃப் சி கோடுகள் ஜூலை முதல் வேலை செய்யாது அப்படின்ன என கனரா வங்கி சொல்லிடுச்சு. சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் அவுங்க வங்கிக்கு சென்று IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாமாம். பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயன்படுத்தி, ஜூலை 1 முதல் வங்கிகளில் ஒன்னும் செய்ய முடியாதாம்.

இது மட்டுமில்லாமல் ஸ்விப்ட் கோடு, எம்ஐசிஆர் கோடுகள் செக் புக் என ஒன்னும் செயல்படாது எனவும் சொல்லிட்டாய்ங்க. ஆக இதனையும் சரியான நேரத்தில் அப்டேட் செய்து, கனரா வங்கியில் சென்று புதிய செக் புக்கிற்காக பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாமாம். ஏன்னா ஜூலை 1க்கு பிறகு, இதன் மூலம் ஒன்னும் செய்ய முடியாமல் போகலாமில்ல.

இந்த ரணகளத்திலும் ஒரு சின்ன கொசுறு தகவல்.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் கம்பெனிகாரய்ங்க அதன் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜூலை 1, 2021ல் இருந்து 3,000 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிட்டு இருக்காய்ங்க. இது மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு அப்படின்னு சொல்லி இருக்காய்ங்க.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்