தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25- 3 -2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 27- 5-2021 அன்று வெளியிடப்பட்டுள்ள ஆணையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுனர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் கொரோனா பெரும் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு வரும் 7-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும் நோய்த்தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் இந்த மூழு ஊரடங்கு ஏழாம் தேதி முதல் 14ம் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். இந்த ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
எனவே இம் மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஏழாம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுத்த அனுமதிக்கப்படும் பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த அனுமதிக்கப்படும். மீன் சந்தையில் விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கிடைக்கும் பொருட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்து கொடுக்கவேண்டும். இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகித டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற் கொள்ள அனுமதிக்கப் படும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
தொடர்ந்து செயல்படுத்தப்படும் மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என தமிழக முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் ஒரு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu