கோவிட் டெத் செர்டிபிகேட் -பெரிய மருத்துவமனை மருத்துவர் தந்த சில தகவல்கள்

கோவிட் டெத் செர்டிபிகேட் -பெரிய மருத்துவமனை மருத்துவர் தந்த சில தகவல்கள்
X

கோப்பு படம்

மருத்துவர்கள் ' இறப்புக்கு காரணம் கோவிட் " என அப்படியே எழுதி தந்துவிட முடியாது

கோவிட் டெத் செர்டிபிகேட்

ஒரு பெரிய மருத்துவமனையில் உள்ள மருத்துவர் சில தகவல்கள் தந்தார்.

பின் நண்பர் தந்த தகவலின்படி Claim forms ம் இணைக்கப்பட்டுள்ளது.

1. Doctors cannnot give death simply "due to covid"

மருத்துவர்கள் ' இறப்புக்கு காரணம் கோவிட் " என அப்படியே எழுதி தந்துவிட முடியாது

2 The following terminologies we are using

If death is in the acute stage (immediate)

Covid pneumonia/ respiratory failure / cardio respiratory arrest

உடனடி கோவிட் மரணங்களில் மேற்கண்ட விஷயங்கள் குறிப்பிடலாம்

3. If death occurs later ( sometimes the pts second swab may becomes negative and death may occur due to pulmonary embolism and other issues)

Then we can give the certificate as " post covid sequalae / pulmonary embolism ....etc

பின் ஏற்படும் மரணங்களில் போஸ்ட் கோவிட் விஷயங்கள் என செர்டிபிகேட்டில் குறிப்பிட முடியும்.

4. Post covid sequalae nnu போட்டு கேட்கலாம். ஆனா உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு போறதுக்காக இரண்டாவது swab எடுத்து நெகட்டிவ் போட்டு வாங்கறாங்க அப்படி வாங்கிட்டா சேஞ்ச் பண்றது கஷ்டம். அலைச்சலும் கூட.

அதாவது காரியம் செய்யவோ, கோவிட்டால் மரணம் என்பதை மறைக்கவோ நெகடிவ் ரிப்போர்ட் வைத்து ஹார்ட் அட்டாக் செர்டிபிகேட் வாங்கிவிட்டால் பின் மாற்றுவது கடினம். இதில் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்.

5. அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ் ல வீட்டுக்கு போயிட்டு கிளினிக்கில் டெத் செர்டிபிகேட் வாங்கினாலும் மாற்றுவது கடினம்.

6. காரியங்கள் செய்வதற்காக மறைக்கப்படும் இறப்பு விஷயங்களில் பின் இவர்களுக்கே கஷ்டமாகி போகிறது.

7.சில மருத்துவமனைகளும் பேக்கிங், போஸ்ட் கோவிட் ஃபார்மாலிடிஸ்க்கு யோசனை செய்து. உறவினர்கள் இப்படி கேட்கும் பொழுது. சரி பிரச்சனை விட்டது நான் கோவிட் இறப்பு செர்டிபிகேட் கொடுத்து விடுகிறார்கள்.

8. இறப்பு நடந்தாலும் பதற்றப்படாமல் யோசிக்க வேண்டும். ஏதாவது சப்போர்ட் அந்த சமயத்தில் தேவை எனில் அட் கனக்டில் கேட்டுக்கொள்ளலாம்.

9. நிதானம் மட்டுமே போஸ்ட் கோவிட் நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும்.

10. செர்டிபிகெட்டில் கோவிட் குறிப்பிடபபடாவிடில் உடனே மாற்றி வாங்கிக்கொள்ளவும்.

11. அரசுக்கு பதிவேற்றிவிட்டால் மாற்றுவது கடினம்

12. கோவிட் மரணத்தில் இழப்பு தொகை, கல்வி தொகை வழங்கப்படுவதால் கவனமாக இருங்கள் சரியான முன் யோசனையுடன் சர்டிபிகேட் வாங்குங்கள்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself