தளர்வுகளுடனான ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தளர்வுகளுடனான ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
X
கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதி.

zதளர்வுகளுடனான ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய தளர்வாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை சில தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 14ம் தேதி முதல் முடிவுக்கு வரும் நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாதிப்புகள் அதிகமாக காணப்படும் கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலம் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்த நிலையில் குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் பாதிப்புகள் குறைந்து வரும் காரணத்தால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி வழங்கியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகள் விவரம்:

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை செயல்பட அனுமதி.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி.

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி.

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

கண்கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டுமணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், பல்ககலைகழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.

ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி.

இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

செல்போன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட்டு பழுது நீக்கும் நிறுவனங்கள், மண்பாண்டகள் கைவினை பொருள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி.

சைக்கிள், பைக் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதி.

தொற்று பரவல் அதிகமுள்ள சேலம் நாமக்கல்,ஈரோடு, கரூர், கரூர்,திருப்பூர், கோவை, நீலகிரி ,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!