சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் எச்சரிக்கை
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம் )
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேலும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 60 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்ட வாய்ப்பிருக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் . சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
சென்னையில் கொரோனா தொற்றை குறைந்தால் மற்ற பகுதிகளில் குறையும். மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும். சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூரில் தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu