பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா
X

பிரிட்டனில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவரது சளி மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உலகின் பல நாடுகள், இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்திருக்கின்றன. இந்தியாவும் நேற்று முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி இரவு வரை தற்காலிகமாக தடை செய்திருக்கிறது.

இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பிய நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த நபர் தற்போது மருத்துவ மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஆய்வு முடிவு வந்த பின்னரே அது வீரியமிக்க வைரஸா அல்லது வீரியம் குறைந்த வைரஸா என்பது தெரியவரும் என்றார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்