'நீட்' தேர்வின்போது என் 95 மாஸ்க் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வின்போது  என் 95 மாஸ்க் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வின் போது கட்டாயம் என் 95 மாஸ்க் அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது

கோவிட் தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான( 2021) நீட் தேர்வு நாளை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதனிடையே மாணவ, மாணவியருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் என். 95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் தண்ணீர் பாட்டில் , 50 மி.லி.,சானிடைசர், உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

மாணவர்கள் ஹால் டிக்கெட்டின் முன்பக்கத்தில் கோவிட் தொற்று குறித்த விவிரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். நீட் தேர்வு நடைபெறும் நாளன்றுக்கு முன்னதாக 14 நாட்களில் கொரோனா அறிகுறிகள் இருந்ததா என்பதை குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது

Tags

Next Story