முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

former Chief Minister OPS- தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவர்து மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court orders cancellation of case against, former Chief Minister OPS- தமிழக முன்னாள் முதல்வராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். இவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்டாடர். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், கல்வித்தகுதிகள் குறித்த தகவல்களை மறைத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அவர்கள் இருவரும் தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறியும், அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மிலானி என்பவர் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பன்னீர் செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேனி நீதிமன்றத்தில் புகார்தாரர் தாக்கல் செய்த புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், பிரமாண மனு இல்லாமல் தாக்கல் செய்யப்படும் புகார் மனுவை ஏற்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story