போலி வைரக்கல் - கோடி ரூபாய் பண மோசடி: வெளிநாட்டு பெண் உட்பட 4 பேர் தலைமறைவு
நாக கற்கள் என்று கூறப்படும் போலி வைரக்கற்கள் படம்
கடையநல்லூரில் போலி வைரக்கற்கள் வைத்து கோடி ரூபாய் அளவில் பண மோசடி செய்து வெளிநாட்டு பெண்ணுடன் மோசடி கும்பல் தலைமறைவு.
கடையநல்லூர் பகுதியில் சமீப காலமாக ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் கடையநல்லூர் மற்றும் மேக்கரை கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல பெண்கள் கூட்டாக சேர்ந்து தங்களிடம் நாக கற்கள் இருப்பதாகவும் அது பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரக்கற்களுக்கு இணையானது என்றும் இதி`ல் முதலீடு செய்தால் பன்மடங்கு ரூபாய் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தைகள் கூறி பலரிடமும் பணம் பறித்துள்ளனர். இந்நிலையில் பணம் செலுத்தி ஏமாந்து போன ஒருவர் கடையநல்லூர் போலீசில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து கடையநல்லூர் போலீசார் முதல் கட்டமாக தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
அதுபற்றிய விவரமாவது, கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வருபவர் காளிராஜ் இவரது மனைவி ரிந்தியா இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது. இந்நிலையில் காளிராஜின் உடன் பிறந்த சகோதரர் வேல்முருகன் அவரது மனைவி சென்னையைச் சேர்ந்த பானுமதியும் திருமணத்திற்காக வந்திருக்கின்றனர். அப்போது திருமணத்தில் காளிராஜிற்கு கிடைக்கப்பட்ட பணத்தை நோட்டமிட்ட வேல்முருகன் தம்பதியினர் எங்களுக்கு வேண்டியவர்களிடம் நாக கற்கள் அதாவது வைரக்கற்கள் உள்ளது அதில் இந்த பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு ரூபாய் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதை அடுத்து அண்ணனின் பேச்சை நம்பிய புதுமணத் தம்பதியினர் பணம் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இந்நிலையில் தனது மோசடியை துவங்க வேல்முருகனின் மனைவி பானுமதி தனக்கு நெருக்கமான வெளி நாட்டைச்சர்ந்த பெண்மணி ஒருவரையும் அவரோடு இனம் தெரியாத ஒரு ஆணையும் கடையநல்லூருக்கு வரவழைத்து தங்களது மோசடியை துவங்கியுள்ளனர். இதற்காக அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்கில் கொரானா காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே விதவை மற்றும் இளம் பெண்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கி அதன் மூலம் கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வறிய நிலையில் வசித்து வந்த ஒவ்வொரு குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்களை வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பு தன்மையை ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்ட மோசடி கும்பல் சுமார் 50 லட்சத்துக்கும் மேல் பலரிடம் போலி வைர கற்களை காட்டி ஆசை வார்த்தைகள் கூறிபணம் பறித்து உள்ளனர். இந்நிலையில் அவர்கள் கூறியபடி கூறிய வரம்பு காலங்களில் பணம் இரட்டிப்பு ஆகாததால் சந்தேகமடைந்த காளிராஜ் மற்றும் அவரது மனைவி ரிந்தியா ஆகியோர் வேல்முருகன் மற்றும் பானுமதி யிடம் தாங்கள் செலுத்திய 15 லட்ச ரூபாயை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
கொஞ்சம் பொறுங்கள் மார்க்கெட் வேல்யூ இன்னும் இரண்டு மாதங்களில் கூடுதல் ஆகிவிடும், அதன்பின் உங்கள் பணத்தை 30 லட்சமாக பெற்றுக் கொள்ளுங்கள் என மோசடி கும்பல் கூறியுள்ளது. அதை நம்பி காளிராஜும் அவரது மனைவியும் பொறுத்திருக்க, கடையநல்லூர் காவல் நிலையம் அருகே வசித்து வரும் கடையநல்லூர் நகராட்சி தற்காலிக பணியாளர் சங்கீதா என்பவர் தான் முதலீடு செய்த மூணு லட்ச ரூபாய் கேட்டு பானுமதி இடம் தகராறு செய்யவே அப்போது அங்கு வந்த டாஸ்மார்க் சேல்ஸ்மேன் ஒருவர் பொறுத்ததே பொறுத்தீர்கள் கொஞ்சம் காத்திருங்கள் உங்கள் பணம் இரட்டிப்பாகி வரும் என சொல்ல சங்கீதாவும் மௌனமாய் சென்றிருக்கிறார்.
இந்நிலையில் மோசடிக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட வெளிநாட்டுப் பெண் மற்றும் அவருடன் வந்த ஒரு ஆணும் தலைமறைவாகி விட்டனர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த வேல்முருகன் தம்பதியினரின் தம்பி காளிராஜ் அவரது மனைவி ரிந்தியாவும் தங்களது பணத்தை கேட்டு மீண்டும் தகராறு செய்தனர் ஆனால் வேல்முருகன் தம்பதியினரோ பணம் திருப்பிக் கொடுக்கும் சூழலில் இல்லை.
இதை அடுத்து தான் காளிராஜின் மனைவி ரிந்தியா இந்த மோசடி கும்பல் குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட கடையநல்லூர் போலீஸ் இதுகுறித்து வேல்முருகனின் மனைவி பானுமதியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனர். அதிகாரிகளின் உச்சபட்ச கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பானுமதி திடீரென காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன அந்த போலீஸ் டீம் சரி நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் இன்னொரு முறை அழைத்தால் வந்து பதில் சொல்லுங்கள் என அனுப்பி விட்டனர்.
இது ஒருபுறமிருக்க இந்த மோசடி கும்பலிடம் பலர் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்வோமா ? வேண்டாமா? வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என நெளிந்து கொண்டு இருக்க ஒரு சிலரோ ரிந்தியாவை தொடர்ந்து புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்.
இந்த மோசடிக் கும்பல் ஏற்கனவே கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வெங்கடாசலம் வேளார் மகன் மாரியப்பன் (56) அர்ஜுன் மோசடி கும்பல் உடன்பட்ட வேல்முருகனின் உடன்பறந்த சகோதரர் கிருஷ்ணசாமி என்பவரிடமும் போலி வைரக்கற்களை கொடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இரண்டு லட்ச ரூபாயை பணம் மோசடி செய்ததுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாரியப்பன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் முறையே புகார் கொடுத்தும் இன்றுவரை மருந்துக்குக்கூட கடையநல்லூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததும் தற்போது தெரிய வந்துள்ளது. தற்போதும் இந்த புகார் தெரிவித்துள்ள ரிந்தியாவையும் அவரது கணவர் காளிராஜையும் கடையநல்லூர் போலீசாரில் சிலர் மிரட்டி வருவதாகவும் புகார்தாரர ரிந்தியா தெரிவித்துள்ளளார்.
இதுகுறித்து ரிந்தியா மேலும் கூறுகையில் இந்த மோசடி கும்பலுக்கும் காவல்துறைக்கும் தொடர்பு உள்ளதோ? என நான் சந்தேகிக்கிறேன் என்றும் இதுகுறித்து தனிப்படை அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு என்னை போன்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை திரும்ப பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிரட்டிய போலீசாரின் வீடியோ ஆதாரங்களுடன். தென்காசி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடையநல்லூர் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்ற நிலையில் தற்போது இந்த போலி வைரக்கற்கள் விவகாரம் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நகரில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu