கொரோனா பாதிப்பு அதிகம், குறைவு மாவட்டங்களில் தளர்வுகள் முழு விவரம்!
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By - Magizh Venthan,Repoter |5 Jun 2021 11:34 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள், குறைவாக உள்ள மாவட்டங்களில் அரசு விதித்துள்ள தளர்வு விவரங்களை வருமாறு.
தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாகும்.
- எனவே இந்த மாவட்டங்களில் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் அங்காடிகள், காலை 6 மணி முதல் மாலை மணி வரை செயல்படலாம்.
- காய்கறி, பூ, பழம், விற்பனை நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
- மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தை, இறைச்சி கூடங்கள் அனுமதிக்கப்படும்.
- அரசு அலவலகங்களில், 30 சதவீத பணியாளர்களுடனும், சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில், மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தை, இறைச்சி கூடங்களுக்கு அனுமதி.
- அரசு அலுவலங்கள் 30 சதவீத பணியாளர்கன் செயல்படலாம். சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கி பதிவுகள் மேற்கொள்ள வேண்ம்.
- எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கார்பென்டர்கள், மோட்ர் மெக்கானிக்குகளுக்கு இரெஜிஸ்டிரேசன் தேவை.
- ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
- இருசக்கர வாகனம், சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
- ஸ்டேசனனரி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
- வாடகை வாகனங்கள், ஆட்டோக்களில் செல்ல இ பதிவு கட்டாயம்.
- கல்வி புத்தகம், எழுதுபொருட்கள் விற்பனைசெய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu