தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நான்காம் அலையா?
கொரோனா அறிகுறிகள் தென்படும் பலர், கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில்லை. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாதபோது, அவர்கள் மூலம் பணியிடங்களில் சக பணியாளர்களுக்கு, குடும்பத்தினருக்கு, அண்டை வீட்டார்களுக்கு கொரோனா பரவுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சளி, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததால், அது கொரோனா பாதிப்பா என்பது கண்டறியப்படவில்லை. மேலும், மருத்துவர்களும் இது கொரோனாவின் நான்காம் அலையாக இருக்குமோ என்று அஞ்சுகின்றனர்.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், ``தடுப்பூசி போட்டுக்கொண்டதாலேயே கொரோனாநம்மை தாக்காது என்று நினைக்கின்றனர். போதிய பரிசோதனைகள் இல்லாததால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று கூறினார்.
கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகிறவர்கள், பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இருப்பதை உறுதி செய்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், அறிகுறிகள் தென்பட்டும் முகக்கவசம் இல்லாமல் இயல்பாகச் சுற்றித் திரிந்து நோயைப் பரப்புகிறவர்கள் என கொரோனா நோயாளிகள் மூன்று வகைகளில் இருக்கின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,285 கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. ஜூன் முதல் வாரத்தில் 14,000-மாக இருந்த பரிசோதனைகள் தற்போது ஒரு நாளைக்கு 25,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சளி, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்னை உள்ளவர்கள் பரிசோதனை மேற்கொண்டால் கொரோனா பாதிப்பு மேலும் உயரக்கூடும்.
நான்காம் அலையை தவிர்க்க நாம் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துவோம்.
மீண்டும் ஒரு ஊரடங்கை நாடு தாங்காது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu