கொரோனா 3ம் அலை: குழந்தைகள் மருத்துவமனைக்கு மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு.
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இது குழந்தைகளை தாக்கும் என்றும் கணித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தற்போது டெல்டா பிளஸ் என்று உருமாறி பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பரவக்கூடும் என்றும், இது குழந்தைகளை தாக்கும் என்றும் வல்லுனர்கள கணித்துள்ளனர். எனவே, ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையல் வைத்திருக்க வேண்டும்.
கொரோனா புதிய அலையை எதிர்கொள்ள குழந்தை மருத்துவர்கள் எந்தநேரமும் தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐ.சி.யு. படுக்கைகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட வேண்டும். குழந்தைகள் பிரிவில் 4ல்1 பங்கு செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார்படுத்திட வேண்டும்.
பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களும் இந்த 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu