கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் 2023 ஏப்ரல் மாதம் தேர்தல்
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள இயக்குநர்கள் தலைவர்கள் ஜனநாயக முறையில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இவர்களின் பதவிக்காலம் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குறைக்கப்பட்டது. இந்த சூழலில் கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் இதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. கூட்டுறவு சங்கங்ளுக்கு 2018ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் 2023 ஏப்ரலில் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க சட்ட திருத்தம் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாக குறைக்கப்பட்டதாக இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளதால் கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டு காலம் பதவி இருப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து மேலும் ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்ப பெறுவதாக கூறி சட்டத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் கூட்டுறவு சங்க பதவிகளின் பதவி காலத்தை ஏன் மூன்றாண்டுகளாக குறைத்தீர்கள் என்று ஆளுநர் தரப்பில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu