சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம்

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம்
X
வட்டார வளர்ச்சி அலுவலரின் ஜாதி பெயரைச் சொல்லி மிரட்டியதாக சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜாதி பெயரை சொல்லி அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒருமையில் திட்டியதாகவும், மிரட்டியதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து சர்ச்சையில் சிக்கியதால் அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாக்காவை மாற்றம் செய்து கவர்னர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம் செய்துள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!