கமல் ‘டிக்’ செய்யப் போகும் தொகுதி எது? இப்போதே ‘சூடு பிடிக்குது’ தேர்தல் களம்

கமல் ‘டிக்’ செய்யப் போகும் தொகுதி எது? இப்போதே ‘சூடு பிடிக்குது’ தேர்தல் களம்
X

constituency Kamal will contest- மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல்ஹாசன் (கோப்பு படம்)

constituency Kamal will contest,- வரும் பார்லிமென்ட் தேர்தலில், கமல் போட்டியிடும் தொகுதி எது என்பதில் இப்போதே, அவரது கட்சியினர் முனைப்பு காட்டத் துவங்கி விட்டனர். இதனால் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

constituency Kamal will contest, 2024 parliamentary elections- தமிழ் சினிமாவில், 60 ஆண்டுகளுக்கு மேலாக, நடிப்பு துறையில் உலகநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன், மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். சினிமாவிலும் நடித்துக்கொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் தொகுத்து வழங்கிக் கொண்டு, கட்சியையும் நடத்தி வருகிறார்.

கடந்தமுறை, பார்லிமென்ட் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற நிலையில், மிக குறைந்த ஓட்டு வித்யாசத்தில்தான் கமல், வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுபோல, தமிழகத்தின் பல தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதிமய்ய கட்சி வேட்பாளர்கள், ஓரளவு கணிசமான ஓட்டுகளை பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அடுத்த ஆண்டு, 2024ம் ஆண்டு நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக குறிப்பிட்ட சில தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர், அதில் கமல்ஹாசனை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 12 பார்லிமென்ட் தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

இதில் தென் சென்னை, கோவை ஆகிய தொகுதிகள் முதல் இடத்தில் உள்ளன. மத்திய சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி, ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளும் இந்த 12 தொகுதிகளுக்குள் இடம்பிடித்துள்ளதாக தெரிகின்றன. இப்படி அடையாளம் காணப்பட்டுள்ள 12 தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசனை போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் கட்சியினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பணிசெய்து வருகின்றனர். மக்களோடு மய்யம் என்ற பெயரில், தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வரும் கமல் கட்சியினர் கோவை தொகுதியில் கவனம் செலுத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.


அடுத்ததாக தென்சென்னை, மதுரை தொகுதிகளிலும், பின்னர் மற்ற தொகுதிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பார்லிமென்ட் தேர்தலுக்குள் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது என்பதை இறுதி செய்யவும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே போட்டியிட்ட கோவை தொகுதியில், கமல் மீண்டும் களம் இறங்குவாரா அல்லது மற்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வாரா, என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே நிலவுகிறது. இன்னும் கமல் கட்சியுடன் கை கோர்க்கும் கூட்டணி கட்சிகள் முடிவாகவில்லை. கமலை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிந்தால் மட்டுமே, அவர்களின் கட்சி செல்வாக்கு, ஓட்டு செல்வாக்கு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைக்க முடியும் என்ற நிலையில், கமல்ஹாசன், தேர்தல் நேரத்தில் தான் தொகுதியை முடிவு செய்ய அதிக வாய்ப்புள்ளது. அதில், அடையாளம் காணப்பட்ட 12 தொகுதிகளில், ஒன்றாக அந்த தொகுதி நிச்சயம் இருக்கும் என, கமல் கட்சியினர் கூறிவருகின்றனர்.

எனினும் கமல் கட்சியினர், தங்கள் தொகுதியில் கமல் போட்டியிட்டால், தங்களுக்கு பெருமை, கவுரவம் என்ற ஆர்வத்தில் மக்கள் மத்தியில், கமல் செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக, பிரசாரத்தை இப்போதே துவங்கி விட்டனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers