காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தாெண்டர்கள் அதிர்ச்சி!

காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தாெண்டர்கள் அதிர்ச்சி!
X
தற்போது விதிமுறைகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி உள்ளது.

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து அந்தப் பதிவை தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து ராகுல்காந்தி நீக்கினார்.

இந்நிலையில் தற்போது விதிமுறைகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி உள்ளது. இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாகவும், அதன்படி டுவிட்டர் செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் ரோகன் குப்தா குற்றம்சாட்டி உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture