இன்று பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆவேசம்
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த ஏழு பேர்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சி காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தன்னை விடுவிக்கும்படி பேரறிவாளன் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் போராடி வந்தார். அரசியலமைப்பு 142 -ஐ பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
பேரறிவாளனின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ''அன்று கோபல் கோட்சே இன்று பேரறிவாளன்'' என்று விமர்சனம் செய்திருக்கிறார். மாணிக்கம் தாகூர் மேலும் தனது டுவிட்டர் பதிவில், குற்றவாளிகள் கொலைகாரர்கள். அவர்கள் நிரபராதிகள் அல்ல. உச்சநீதி மன்றதால் தண்டனை பெற்றவர் இன்று விடுதலை . அன்று கோபல் கோட்சே இன்று #பேரறிவாளன்''என்று குறிப்பிட்டிருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu