வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி: பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்

வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி: பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்
X
சிவகங்கையில்,வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி தரக்குறைவாக பேசியதாக பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்

சிவகங்கையில்,வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி தரக்குறைவாக பேசியதாக சாலையில் அமர்ந்து பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்.

சிவகங்கையில் அமைந்துள்ள 27 நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. பாஜகவின் சார்பில் 20 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஹேமாமாலினி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏலம்மாள் என்பவர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி வந்துள்ளார். காங்கிரஸ் பெண் நிர்வாகியை, பாஜக வேட்பாளர் ஹேமாமாலினி வெளியேற சொன்னதாக கூறப்படுகிறது. அப்போது வேலம்மாள், பாஜக வேட்பாளரை அவதூறாக பேசியுள்ளார். இதனையடுத்து தன்னை தரக்குறைவாக பேசியதாக கூறி, பாஜக பேட்பாளர் ஹேமமாலினி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.

Tags

Next Story
ai in future agriculture