/* */

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காங்.வேட்பாளர் ப.சிதம்பரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.

HIGHLIGHTS

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காங்.வேட்பாளர் ப.சிதம்பரம்
X

தமிழகத்தில் ஜூன் 10-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.

இதன் பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ப.சிதம்பரம் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுத் தாக்கலின் போது அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 30 May 2022 3:07 PM GMT

Related News