/* */

அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன்

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன்
X

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன். (கோப்பு படம்).

தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக உள்ள இவர், கடந்த 2011-2016 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக சிறிது காலம் இருந்தார். மேலும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்துள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு செல்லப்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் உத்தரவாதம் அளித்து முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் அளித்த தகவலை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 15 நாட்களுக்கு விளாத்திகுளம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, செல்லபாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Updated On: 12 Oct 2023 12:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!