மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை

Tamil Nadu School News - மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இட ஒதுக்கீடை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, முதலில் பொதுப் பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
பொதுப் பிரிவினருக்கு 31%, பழங்குடியினருக்கு 1%, பட்டியலினத்தவர்களுக்கு 18% , அருந்ததியராக இருப்பின் அவர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20%, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) 3.5%, பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.
அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும்.
மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu