திமுக எம்பி மிரட்டினாரா? கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற கணேஷ்குமார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே, தேவதானம் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் அணை, முழு கொள்ளவு எட்டியது. இதனை விவசாய பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்வில், நேற்று எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அந்த நீர்த்தேக்க அணையில் காவலாளியாக பணிபுரிந்த, தேவதானம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், அதே பகுதியில் சொந்தமான 2,1/2 ஏக்கர் விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தின் ஒட்டிய பகுதியாக தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி தனுஷ் எம்.குமார் நிலம் உள்ளது.
திமுக எம்.பி கணேஷ் குமார், தனது நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதனால் விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை இல்லை எனவும், ஒரு கட்டத்தில் தனது 50 லட்சம் மதிப்பிலான 2,1/2 ஏக்கர் விவசாய நில சொத்தினை, தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும்படி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும். அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், தென்காசி எம்.பி. மீது காவலாளி கணேஷ்குமார் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், அணைநீர் திறந்து விட வந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வாகனம் முன்பு, மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீ குளிக்க, கணேஷ் குமார் முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர். கணேஷ் குமாரை மீட்டு, மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேச வைத்த போது, தனது விவசாய நிலத்திற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாக, கணேஷ்குமார் தெரிவித்தார்.
மேலும், விவசாய நிலத்தினை அளக்க சர்வேயரிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் வரவில்லை என தெரிவித்தார். இதனை கேட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி, மீண்டும் இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனவும், உரிய விசாரனை மேற்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட நபரிடம் உறுதி கூறிவிட்டு சென்றார். திமுக எம்பி மீது நில அபகரிப்பு மற்றும் கொலைமிரட்டல் புகார் கூறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu