தாமிரபரணி நாகரிகம் அறிய சென்னை புத்தகக் கண்காட்சி வாங்க..!
சென்னையில் புத்தகக் கண்காட்சி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது, அதில் அரசின் தொல்லியல்துறை சார்பில், "பொருணை ஆற்றங்கரை நாகரிகம் மகாஅரங்கு" அமைக்கப்பட்டுள்ளது. இது புத்தக அரங்கின் முன்புறம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை பறைசாற்றுவது தாமிரபரணி நாகரீகம். சிவகலை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய அகழ்வாராய்ச்சி முடிவுகள் மூலம் நம்முடைய தொன்மையானவரலாற்றையும், நாகரீகத்தையும் அறியலாம். இதனை அறிய நினைக்கும் போது நம்மை வியக்க வைக்கும். நமது வரலாற்றின் தொன்மையை இந்த ஆராய்ச்சி கூறும் போது பிரமிக்க வைக்கிறது. உலகின் மூத்தகுடிமக்கள் தமிழர்கள் என்பதை அறிய முடிகிறது.
அனைவருக்கும் நல்லதொரு வாய்ப்பு.. சிவகலை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் உள்ள இந்த அரங்கை அவசியம் சென்று பாருங்கள். ஏனென்றால், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை அப்படியே நமக்கு காட்சிப்படுத்தி விளக்குகின்றனர். தமிழர் பெருமையை அறிய நல்லதொரு வாய்ப்பு .
அரங்கின் உள்ளே.. சில காட்சிகள்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu