காவியை ஆன்மீகத்துடன் இணைத்து தமிழிசை பரபரப்பு பேச்சு

புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன்.
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் பாலாறு பெருவிழா நடைபெற்றது.பெண் துறவிகள் மாநாட்டில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், ஆன்மிகத்தை விடுத்து தமிழக கலாசாரம் இல்லை. ஆண்டாள் கற்றுக் கொடுத்த தமிழ்தான் இன்று அனைவரின் நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகமும், காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால் தமிழகத்திற்கும், காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர் என பரபரப்பாக தொடர்ந்து பேசினார்.
மேலும் சிதம்பரத்தில் நடராஜர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும், விஞ்ஞானமும் சொல்கிறது. நடராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்றால் அது சுதந்திரமா? இல்லை. சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்காக சகிக்க முடியாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை என, ஆளுனர் செளந்தரராஜன் குறிப்பிட்டார். இதேபோல, கடந்த மே மாதம், தமிழக ஆளுனர் ரவியை மரியாதை நிமித்தமாக சென்னையில் சந்தித்த போதும், காவி தமிழாக தமிழ் வளர்ந்ததே தவிர, கருப்பு தமிழாக வளரவில்லை என, காவி நிறம் குறித்து தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசியதும் சர்ச்சை கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu