'போலாம் ரைட்' நிகழ்ச்சி: பஸ்சில் மாணவர்களுடன் பயணித்த கோவை கலெக்டர்

போலாம் ரைட் நிகழ்ச்சி: பஸ்சில் மாணவர்களுடன் பயணித்த கோவை கலெக்டர்
X

அரசு பள்ளி மாணவர்களுடன் பயணம் செய்த கோவை கலெக்டர் சமீரன். 

கோவையில், ‘போலாம் ரைட்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்களுடன் கலெக்டர் பயணம் செய்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில். 'போலாம் ரைட்' என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில், 5 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் 50 பேர் பங்கேற்றனர்.

மாணவ- மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். உயர்கல்வி படிக்க என்ன செய்ய வேண்டும் என்று, மாணவர்களுக்கு கலெக்டர் சமீரன் அறிவுரை கூறினார். பின்னர், தனியார் பஸ் மூலம் மாணவ- மாணவிகளுடன் இருக்கையில் அமர்ந்து பயணித்தார்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியியல் அருங்காட்சியகத்துக்கு பஸ்சில் சென்ற கலெக்டர், மாணவ மாணவிகளுக்கு பூச்சிகள், அவற்றின் தன்மை குறித்து விளக்கினார். தங்களுடன் கலெக்டர் பயணம் செய்ததால், அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!