ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்
தமிழக முதல்வர் ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமம் நற்கடல் குடிகருப்பண்ண சுவாமி கோயில் திருவிழாவையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த 600 காளைகளும், 400 மாடிபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
இந்த நிலையில், போட்டியை காண வந்திருந்தி புதுக்கோட்டை மாவட்டம் கண்ணகோன்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற 25 வயது இளைஞரை, மாடுபிடிக்கும் பகுதியில் காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில்9 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக விளங்கிய அரவிந்த், மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார். 3வது இடத்தில் இருந்த அரவிந்த்ராஜ் வயிற்றில் மாடு குத்தியதில், குடல் சரிந்து பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்நிலையில், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்த் ராஜ் குடும்பத்தினருக்கும், பெரிய சூரியர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த கண்ணக்கோண்பட்டியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu