குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 : பட்ஜெட்டில் அறிவிப்பு
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு உரையை தொடங்கிய நிதியமைச்சர் மதியம் 12 மணி வரை தாக்கல் செய்தார். அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு இன்றைய பட்ஜெட் முடிவடைவதாகவும் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பட்ஜெட் தொடர் தொடங்கும் எனவும் அறிவித்தார்
பட்ஜெட்டில் அறிவிக்கபட்ட டாப் 10 அறிவிப்புகள்:
1.தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15ஆம் நாள் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
2.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
3.தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும்.
4.சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
5.மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
6.கோவையில் ரூ.172 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
7.ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
8.சென்னையின் முக்கிய ஆறுகளாகத் திகழும் அடையார் மற்றும் கூவம் ஆறுகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
9.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
10.முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய நாள் முடிவுக்கு வந்த நிலையில், நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் 23, 24, 27, 28 பொது விவாதங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 28ம் தேதி அமைச்சரின் பதிலுரை இடம்பெறும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu