சென்னையில் முதல்வர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

Recent Business News- திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவ்வபோது முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்று 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
கடந்த நவம்பர் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாடு கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் வாயிலாகரூ. 52,549 கோடி முதலீட்டில் 92,420 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களால் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு கிடைக்கும் என்றும், இதன்மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu