அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
X
CM News Today - அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

CM News Today -முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 10 மணிக்கு அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடி வடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்த உள்ளார். குறிப்பாக வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாருதல் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story