தென்மண்டல கவுன்சில் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு
CM Stalin -திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவுகளை செய்த பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர் . மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பகிர்வு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று மதியம் ஒரு மணி அளவில் விமான மூலம் திருவனந்தபுரம் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை கோவளம் லீலா பேலஸ் ஹோட்டலில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு, சிறுவாணி அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu