முறைகேடின்றி கொள்முதல் செய்க: தஞ்சையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.
தஞ்சாவூர் புதிய பேருந்துநிலையம் அருகே, அரசு சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று, 44,525 பயனாளிகளுக்கு 238 கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கினார். மேலும் 98 கோடியில் முடிவுற்ற 90 பணிகளையும், 894 கோடியில் 134 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தஞ்சை பெரிய கோயில், பெருமை வாய்ந்த கல்லனை, சோழர்களின் தலைநகரம் என சிறப்பு வாய்ந்த தஞ்சைதான், கருணாநிதிக்கு போராட்ட பயிற்சி கொடுத்தது. தஞ்சாவூர் என்றாலே காவிரி, காவிரி பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால், காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க முதல் முதலில் வலியுறுத்தியவர் கருணாநிதி. காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.
கடந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு 1.67 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சாதனைக்கு அரசு எடுத்த முயற்சி தான் காரணம். தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பட்டியல் எழுத்தருக்கு மாத ஊதியமாக 5,288 ரூபாயும், காவலருக்கு 5, 218 ரூபாயும், அகவிலைப்படியாக 3,499 ரூபாய் சேர்த்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சுமைதூக்கும் ஊழியர்களுக்கு மூட்டைக்கு 3.25பைசாவில் இருந்து 10 ரூபாயாக உயர்த்திப் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே முறைகேடு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் கொண்டு வரும் விவசாயிகள் எந்த புகாரும் தெரிவிக்காத வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu