உள்ளாட்சியில் நல்லாட்சி தருவதுதான் திமுக: திருப்பூரில் ஸ்டாலின் பேச்சு

உள்ளாட்சியில் நல்லாட்சி தருவதுதான் திமுக: திருப்பூரில் ஸ்டாலின் பேச்சு
X

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின். 

திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி தருவதுதான் என்று, திருப்பூர் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று மதியம் திருப்பூருக்கு வருகை தந்தார். அதன்பின்னர், திருப்பூர் காலேஜ் ரோடு, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்பட 21 துறைகளின் சார்பில் 4 ஆயிரத்து 335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மின்வாரியத்துறை சார்பில் தெற்கு அவினாசி பாளையம், கே.அய்யம் பாளையம், சின்னே கவுண்டன்பாளையம் துணைமின்நிலையம், புதுராமகிருஷ்ணாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாராபுரம் கால்நடை மருத்துவமனை பள்ளிக்கட்டிடங்கள் உள்பட ரூ.28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இன்றைய நிகழ்வில், மொத்தம் ரூ..56கோடியே 29 லட்சத்து 24ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதை, திருப்பூர் மக்களிடம் காண்கிறேன். இந்த அரசு அடையாளத்திற்காக 10 பேருக்கு மட்டும் வழங்கும் அரசாக இருக்காது. அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும் . நெம்பர் 1 முதல்வர் என்பது எனக்கு பெருமையல்ல; நெம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை.

திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகிறது, அதற்குள் இவ்வளவு செய்துள்ளோம்; இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்யவுள்ளோம் என எண்ணிப் பாருங்கள். திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதுதான்; ஆனால், கடந்த ஆட்சியில் அது எங்கே போனது என்றே தெரியவில்லை. உத்தரவிடுங்கள், உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன். எங்களை உற்சாகப்படுத்துங்கள். இவ்வாறு, மு.க. ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!