ரூ.6.96 கோடி செலவில் கைத்தறித் துறை கட்டடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (29.4.2022) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் கீழ் செயல்படும் கைத்தறித் துறை சார்பில் தஞ்சாவூர், கரூர், விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 96 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம், காட்சியறையுடன் கூடிய கிடங்கு, பொதுவசதி மையக் கட்டடம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பிரிவுகளின் நலனுக்காகவும் குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் காளிகாவலசு தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 200 கைத்தறிகள் மற்றும் பிற வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம்
சென்னிமலை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காட்சியறையுடன் கூடிய புதிய கிடங்கு;
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் கைத்தறி, உபகரணங்கள் மற்றும் நெசவு தொடர்பான பிற பணிகளை மேற்கொள்ளும் வகையில் 58 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருவிடைமருதூர் பொது வசதி மையக் கட்டடம்
கரூர் மாவட்டத்தில் 74 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடம்;
அருப்புக்கோட்டை மற்றும் இராமச்சந்திராபுரம் பகுதிகளில் 1 கோடியே 43 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள்
என மொத்தம் 6 கோடியே 96 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கைத்தறித் துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை ஆணையர் த.பொ. ராஜேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu