மதுரையில் கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
மதுரையில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வுத் திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
அதன் பின்னர் பிப்.15 மற்றும் 16 ஆகிய நாட்களில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு நடத்தினார்
களஆய்வில் முதல்வர் திட்டத்தில் தற்போது மதுரை மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.
மதுரை,திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணி உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
நேற்று 5 மாவட்ட பிரதிநிதிகள், தென் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu