பிரதமர் மோடி தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் குஜராத் பயணம் ரத்து
பைல் படம்
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென்னின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே ரேசன் எனும் பகுதியில் வசித்து வந்தார். பிரதமர் மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன், ஹீரா பென் வசித்து வந்தார்.
ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
ஹீரா பென்னுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். ஹீரா பென்னின் உயிர் இன்று காலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் பிரிந்தது. அதன்பிறகு அவரது உடல் அவர் வசித்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் பிரதமர் மோடி குஜராத் விரைந்து சென்றார்.
ஹீரா பென்னின் இறுதி சடங்குகள் துவங்கியது. பிரதமர் மோடி உடலை தோளில் சுமந்து சென்று இறுதி சடங்குகள் செய்தார். அதன்பிறகு ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வரான ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் திட்டமிட்டிருந்தனர்
இந்நிலையில் பிரதமர் குடும்பத்தினர் விடுத்துள்ள வேண்டுகோளில், மறைந்த ஆன்மாவை மனதில் நிறுத்துவதே போதுமானது. கடினமான காலங்களில் அனைவரின் பிரார்த்தனை மற்றும் இரங்கலுக்கு நன்றி, அவரவர் திட்டமிட்டபடி தங்களது பணியை செய்யுங்கள் என கூறியுள்ளனர்.இந்த வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஸ்டாலினின் குஜராத் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu