/* */

ஆசிரியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Teachers Day Wishes in Tamil - ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆசிரியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
X

மு.க.ஸ்டாலின்

Teachers Day Wishes in Tamil -ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறிவு ஒளியூட்டி, அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே!

உங்கள் யாவருக்கும், என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! ஒரு சிறந்த நாடு, எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு " என்கிறார்.

இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர். ஆனால் 'தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்" என்று பொருள் காண நான் விழைகின்றேன்

ஏனெனில், தமக்குரிய நெறியிலிருந்து வழுவாது, பிறழாது தாமும் வாழ்ந்து, வளரும் இனம் தலைமுறையினரையும் அந்நெறிப்படி வாழக் கற்றுக் கொடுக்கும் பொறுப்புமிக்கவர்கணாக இருப்பவர் ஆசிரியர்களே.

மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான், காலந்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்விச் செல்வத்தை மாணவர் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே!

நாட்டின் எதிர்காலச் சொத்துக்களாம் இளைய தலைமுறையை நன்முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்குச் சொந்தக்காரர்களாகிய ஆசிரியப் பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்துப் போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழார் கொண்டாட்டம், வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சர்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Sep 2022 4:20 AM GMT

Related News