பொங்கல் சிறப்பு தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் சிறப்பு தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
X

முதலமைச்சர் ஸ்டாலின்

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு

தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புக்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இத்தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கும்.

சுமார் இரண்டு கோடியே 15 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்படும்.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். என முதலமைச்சர் அறிவித்துள்ளார் .

Tags

Next Story
ai solutions for small business