ஒமிக்ரானை கட்டுப்படுத்த அதிரடி முடிவு? இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒமிக்ரானை கட்டுப்படுத்த அதிரடி முடிவு? இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
X
தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் முடிவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை, 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்தியாவிலும் ஒமிக்ரான் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு ஒன்று என்றிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இது 34 ஆக அதிகரித்தது.

இதையடுத்து, ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காலை 11 மணியளவில் நடக்கும் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதுதவிர, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் உயர் அதிகாரிகளும், இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதன் முடிவில், ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. சில அதிரடி முடிவுகளை அரசு அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!