நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்

நெல்லையில் ரூபாய் 15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டார்.

அதன்படி, தமிழர் நாகரீகம் பண்டைய நாகரீகம் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தற்போது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், பானைகள் உள்ளிட்டவை அங்கு கண்டறியப்பட்டுள்ளன.

கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் தற்போது தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. கி.மு. 6ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே கொற்கை துறைமுகம் செயல்பட்டுள்ளது. வெளிநாடுகளுடனும் தமிழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கடல் வணிகம், முத்து குளித்தல் எனப்பல விஷயங்கள் அகழாய்வில் தெரியவந்துள்ளது.

எனவே தமிழ் பண்பாட்டை அறிய தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்தொடர்ச்சியாக, நெல்லையில் ரூபாய் 15 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!