தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்: எங்கே? எப்போது?
தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்த வருமானம் அரசின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.
இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ. 5,000 கோடி கூடுதலாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு இடத்தில் மூடினாலும் இன்னொரு இடத்தில் திறந்து விடுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது, வருமானம் குறைவாக உள்ள கடைகள் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
பின்னர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி முதல் 500 கடைகளை மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu