10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
X

பைல் படம்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ம் வகுப்புக்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23ம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது.

10 ஆம் வகுப்பு தேர்வு:

26.03.2024- தமிழ்

28.03.2024 - ஆங்கிலம்

01.04.2024- கணிதம்

04.04.2024- அறிவியல்

08.04.2024-சமூக அறிவியல்

12 ஆம் வகுப்பு தேர்வு:

01.03.2024- மொழிப் பாடம்

05.03.2024- ஆங்கிலம்

08.03.2024- கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல்

11.03.2024- வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல்

15.03.2024-இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்

19.03.2024-கணிதம், விலங்கியல், நுண் உயிரியல்

22.03.2024- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், பேஸிக் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறியியல், பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக் மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் -

10 ஆம் வகுப்புக்கு மே.10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 11 ஆம் வகுப்புக்கு மே.14 ஆம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுத் தேர்வுகளை அதற்கு முன்பாக நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல், உயர் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுத் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ளும் வரையில் போதிய இடைவெளி விட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்வு நடைபெறும் நாட்கள் சற்றே முன்னதாக இருந்தாலும்கூட வரும் அரையாண்டுத் தேர்வுக்குள்ளதாகவே பாடத்திட்டத்தை முடித்து மாணவர்களைத் தயார்படுத்திவிடலாம் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!