சிண்ட்ரெல்லா காலணி பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவீட்

சிண்ட்ரெல்லா காலணி பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவீட்
X
என் கார் மீது காலணியை வீசியவர் அதை திரும்பப் பெற விரும்பினால், எனது உதவியாளர்கள் பத்திரமாக வைத்துள்ளனர் என பழனிவேல் தியாகராஜன் டுவீட்

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது மதுரை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 6 பேரும் தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்த பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார் ? காலணியை தவற விட்ட சிண்ட்ரெல்லா தனது காலணியை திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் எனஅந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!